Asianet News TamilAsianet News Tamil

சென்னையை 3 மணிநேரத்தில் புரட்டி எடுத்த கனமழை... குளம்போல் சாலைகள்... ஒருநாள் மழைக்கே ஸ்தம்பித்தது..!

வடகிழக்கு பருமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால்  சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

3 houres Heavy rain in Chennai
Author
Chennai, First Published Oct 29, 2020, 9:56 AM IST

வடகிழக்கு பருமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் பெய்த மழையால்  சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 

தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்துள்ளது. கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.

3 houres Heavy rain in Chennai

பல்வேறு சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதுபோல் கோயம்பேடு முதல் தாம்பரம் வரை மெயின் ரோட்டில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

3 houres Heavy rain in Chennai

கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017ம் ஆண்டு நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios