Asianet News TamilAsianet News Tamil

உஷார் மக்களே.. வரும் 28 நாட்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்.. பகீர் கிளப்பி எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்.!

பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும் சோதனையை தொடர்ந்து  அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

28 days are very important...Health Secretary Radhakrishnan
Author
Chennai, First Published Nov 18, 2020, 11:54 AM IST

பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும் சோதனையை தொடர்ந்து  அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளது. பிற மாவட்டங்களில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் மேலும் தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

28 days are very important...Health Secretary Radhakrishnan

இது தொடர்பாக சுாதாரத்துறை செயலாளர் அனுப்பி உள்ள உத்தரவில் : கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைந்து  கொண்டே வருகிறது. காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே உள்ளது. எனவே வரும் நாட்களில்  மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக  கடைபிடிக்க வேண்டும். 

28 days are very important...Health Secretary Radhakrishnan

இணை நோய்கள் உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின்  எண்ணிக்கையை குறைக்க கூடாது. கடந்த சில நாட்களாக கட்டுமான பகுதிகளில் கொரோனா தொற்று பரவுகிறது.  தஞ்சாவூர் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள  கட்டுமான பகுதிகளில்  கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

28 days are very important...Health Secretary Radhakrishnan

இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை குறைக்க கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும். இனிவரும் 14 முதல் 28 நாட்களில் மிகவும் முக்கியமானது. பல மாநிலங்கள் ஆன்டிஜென் பரிசோதனை செய்வதால் வெளி  மாநிலங்களில் வருபவர்களை கண்காணிக்க வேண்டும். மாநிலத்திற்குள் காய்ச்சல் முகாம், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு சோதனை, தொடர்பு  உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வரும்  நாட்களில் சோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios