செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்யும் என தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதால், கீளகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், நிவர் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்யும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என எச்சரித்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.