ஷாக்கிங் நியூஸ்.. தண்ணீர் வாளியில் மூழ்கி 18 மாத குழந்தை துடிதுடித்து பலி.. கதறி துடித்த பெற்றோர்..!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல்குமார் பைகா (28). இவர், தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் தங்கி மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். 

18 Month Old Girl Child Falls Into Bucket in chennai

சென்னை அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 18 மாத குழந்தை துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல்குமார் பைகா (28). இவர், தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் தங்கி மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 18 மாத குழந்தை  சந்திரிகா பைகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ராகுல்குமார் பைகா, வேலைக்கு சென்று விட்டார். 

இதையும் படிங்க;- வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு.. கடித்துக்கொன்று விட்டு எஜமானரின் குடும்பத்துக்காக உயிர்விட்ட பாசக்கார நாய்

வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டும் தனியாக இருந்தனர். மாலையில் ராகுல்குமார் பைகாவின் மனைவி வீட்டின் வெளியே நின்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தண்ணீர் வாளிக்குள் தனது குழந்தை தலைகுப்புற மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே நீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாகன போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios