ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் வீட்டில் அதிரடி சோதனை… ரூ.15 லட்சம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல்!!

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 4 பேரின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

15 lakhs and cell phones are seized in raid at ISIS supporters house at chennai

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 4 பேரின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக 4 பேரின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: இருதய மாற்று அறுவை சிசிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸார் சோதனை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் கேஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios