சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு! 144 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்.!
சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து தோகா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 146 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று காலை 7 விமான ஊழியர்கள் உட்பட 146 பேருடன் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் சென்ற போது திடீர் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!
உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள் இயந்திர கோளாறு தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் எடுத்த துரித நடவடிக்கையால் 144 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். பயணிகள் தற்போது ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்ட உடன் விமானம் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- மாநகரப் பேருந்தில் நடத்துநரை தாக்கிய பெண் பயணி… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!