122 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவு.. சீர்காழியை சீரழித்த பேய் மழை.. வானிலை மையம் ஷாக் ரிப்போர்ட்..!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மேல் நிலை கொண்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு வட மேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. இதனால், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் கரையோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்.
மயிலாடுதுறையில் வரலாறு காணாத வகையில் அதிகபட்சமாக சீர்காழியில் 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மேல் நிலை கொண்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு வட மேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. இதனால், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் கரையோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மழைப்பொழிவு மையனஸ் 3 சதவீதம் தற்போது 12 சதவீதமாக ஒரே நாளில் உயர்ந்துள்ளது.
கடலூர் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பததிவாகியுள்ளது. சீர்காழியில் கடந்தத 122 ஆண்டுகளில் பெய்த அதி கனமழை இதுவாகும். சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பொழிந்ததற்கு காரணம் மேவெடிப்பு அல்ல என பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் தற்போது வரை கிடைக்க வேண்டிய 45 செ.மீ. பதில் 57 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 27 சதவீதம் அதிகமாகும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை 26 செ.மீ.க்கு பதில் 29 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய இயல்பு மழையை விட 12 சதவீதம் அதிகமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.