Asianet News TamilAsianet News Tamil

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..?

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10-th result... tamil subject pecentage lower
Author
Tamil Nadu, First Published Apr 29, 2019, 10:37 AM IST

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.1 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018-ம் ஆண்டு 94.50 சதவீதமாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முதலிடம்:- 

மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 98.53 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் 2-வது இடத்திலும், நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 89.98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:- 

மொழிப்பாடம்: 96.12%
ஆங்கிலம்: 97.35%
கணிதம்: 96.46%
அறிவியல்: 98.56%
சமூக அறிவியல்: 97.07% 

Follow Us:
Download App:
  • android
  • ios