Asianet News TamilAsianet News Tamil

ஷாக்கிங் நியூஸ்.. சென்னை சென்ட்ரலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்.. பெண் பத்திரிகையாளர் கைது!

இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பவுடர்களை ரயில்களில் ஒருசில மர்ம கும்பல்கள் கடத்தி வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிக்கடி ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். 

10 kg of ganja seized in Chennai Central.. Woman journalist arrested tvk
Author
First Published Mar 27, 2024, 1:55 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பண்டல், பண்டலாக 10  கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பவுடர்களை ரயில்களில் ஒருசில மர்ம கும்பல்கள் கடத்தி வருகின்றனர். இவற்றை தடுக்கும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிக்கடி ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு அதிரடி சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதனப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து தன்பாத் விரைவு ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண்ணை பிடித்து சோதனை செய்த போது பண்டல், பண்டலாக அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது .

இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ்(25) என்பதும் அவர் ஒடிசாவில் உள்ள பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரயில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios