Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் துப்பாக்கியை காட்டி 1.50 கோடி நகைகள் கொள்ளை; பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை

ஆவடி அருகே பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1.5 crore worth jewellery theft at shop with gun point in chennai vel
Author
First Published Apr 15, 2024, 11:07 PM IST

சென்னை ஆவடி அடுத்த முத்தாபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் இதே பகுதியில் கிருஷ்ணா என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம் போல் நகைக்கடையை திறந்து வியாபாரம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பகல் நேரத்தில் கடைக்கு வந்த 4 மர்ம நபர்கள் பிரகாஷிடம் நகைகளை கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.

பிரகாஷ் நகைகளை கொடுக்க மறுக்கவே துப்பாக்கியை காட்டி கை கால்களை கட்டிப் போட்டுவிட்டு பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் சென்று தாங்கள் எடுத்து வந்த பையில் நகைகள், ரூ.5 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

எதிர்க்கட்சியில் இருக்கும் வரை ஊழல்வாதிகள், பாஜகவில் இணைந்துவிட்டால் புனிதர்கள் - கனிமொழி விமர்சனம்

இதனைத் தொடர்ந்து பிரகாஷ், முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் nகாள்ளைக்கு பயன்படுத்தி யவாகனங்களின் எண் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொள்யைில் ஈடுபட்டது வடஇந்தியர்கள் என நகைக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios