அரியலூரில் காதலித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெங்கொண்டம் அருகே காதலித்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவர் டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணான நதியாவை கடந்த சில வருடங்களாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜவேல் குடும்பத்தினர் நதியாவை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்த்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நதியாவை கொலை செய்துவிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
புதுவையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது; கடைகள் அடைப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா செய்வதறியாது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி. வழக்கு பதிவு செய்து ராஜவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.