திருமணமான 15 நாட்களில் கோமா நிலைக்கு சென்ற மணமகன்; காவல்துறை வலை வீச்சு
அரியலூர் மாவட்டத்தில் திருமணமான 15 நாட்களில் புது மாப்பிள்ளைக்கு தலையில் வெட்டு பட்ட நிலையில் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி. இவர் குடிபோதையில் உதயநத்தம் கிராமத்தில் கார்த்திக் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து கார்த்திக் ஜெயமணியை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது சம்பந்தமாக ஜெயமணி தழுதாழைமேட்டைச் சேர்ந்த பவித்ரன் என்பவர் தான் தன்னை பற்றி தகவல் கூறியதாக கூறி. திருமணமாகி 15 நாட்களே ஆன பவித்திரனை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் பவித்ரன் தந்தை சேட்டு என்பவரையும் தாக்கியுள்ளார்.
இதில் தலையில் வெட்டுபட்ட பவித்ரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த காரணத்தால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பவித்ரன் கோமா நிலையில் உள்ளதால் மீன்சுருட்டி காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து ஜெயமணியை தேடி வருகின்றனர்.
திருமணமான 15 தினங்களில் புதுமாப்பிள்ளை கோமா நிலைக்கு சென்றதால், அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவாரா என்ற ஊக்கத்தில் அவரது உறவினர்கள் காத்திருக்கின்றனர்.