திங்கள் கிழமை திருவிழா, வெள்ளி கிழமை திருட்டு; உண்டியல் நிரம்பும் வரை காத்திருந்த கொள்ளையர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் இராயம்புரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த திங்கட்கிழமை திருவிழா நடைபெற்ற நிலையில் தற்போது கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள இராயம்புரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கள் கிழமை தீ மிதி திருவிழா நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழா என்பதால் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர். பிறகு இது தொடர்பாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தலைக்கேறிய போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்; போக்குவரத்து பாதிப்பு
கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் தாலி செயின் உள்ளிட்டவை வேறொரு கோவிலில் பத்திரமாக எடுத்துச் சென்று வைத்ததால் இவை அனைத்தும் தப்பின. இதனால் கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் என்னப்படாதால் அதன் மதிப்பு தெரியவில்லை என்றும் கோவிலின் நாட்டார்கள் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அரிகொம்பன்; 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு
10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற திருவிழாவில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் இருந்ததால் உண்டியல் நிரம்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.