புல் மப்பில் ஓயாத டார்ச்சர்.. கணவர், மாமனாரால் உயிரை மாய்த்துக்கொண்ட 3 மாத கர்ப்பிணி பெண்.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (30), கூலித்தொழிலாளி. இவருக்கும் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் கணவர், மாமனார் தினமும் சித்ரவதை செய்ததால் 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (30), கூலித்தொழிலாளி. இவருக்கும் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே, மாமனார் செல்வராஜ் (55) அடிக்கடி மருமகள் சகுந்தலாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதை தனது கணவரிடம் கூறிய போது அவர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் கடந்த சில மாதங்களாக தந்தையும், மகனும் சேர்ந்து தினமும் குடித்து விட்டு வந்து சகுந்தலாவை கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மனம்வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் சகுந்தலாவிடம் மாமனார் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்நிலையில், அறையில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த சகுந்தலா மறுநாள் காலையில் தூக்கில் தொங்கினார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சகுந்தலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சகுந்தலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சகுந்தலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 மாத கர்ப்பிணி மனைவி தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.