விடாமல் பலி கேட்கும் நீட்.. தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கிரீன் கார்டனில் 12ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.
அரியலூரில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கிரீன் கார்டனில் 12ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.
இந்நிலையில், நேற்று நீட் தேர்வு எழுதிய பிறகும் கனிமொழி தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்திலும், மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மாலையில் அரியலூரில் உள்ள தனது மனைவியை அழைத்துவர அவரது தந்தை சென்றுள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கனிமொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் தற்போது நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.