Watch : அரியலூர் அருகே பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு! - கழிவு நீரால் பொதுமக்கள் அவதி!
அரியலூரில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அரியலூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், வீடுகள் வணிக நிறுவனங்களில் வெளியேற்றப்படும் கழிவு நீர் குழாய் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதாள குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
தவுத்தாய்குளம் வழியாக பூமிக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாய் மருதையாற்றில், திறந்தவெளியில் சாக்கடை குழாய் செல்கிறது. இந்த சாக்கடை குழாயில் கடந்த நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் பீரிட்டு வெளியேருகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது சாக்கடை நீர் படுவதாலும், சாக்கடை நீர் அந்த இடத்தில் தேங்கி இருப்பதாலும் துர்நாற்றம் வீசி பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இவ்வாறு வெளியேறும் சாக்கடை நீர், மருதைமாற்றில் தேங்கியுள்ள நீரில் கலப்பதால் அத்தண்ணீரை அருந்தும் கால்நடைகளும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிய அளவில் ஏற்பட்ட உடைப்பு தற்போது பெரிய அளவில் மாறியுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் போற்கால அடிப்படையில் சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், இதே போல் இரு வேறு இடங்களில் உடைப்பு ஏற்படுவதால் குழாயை அகற்றிவிட்டு புதிய குழாய் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Crime News: உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்