பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில், யுவராஜின் அனல் பறக்கும் ஆட்டத்தால் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐதராபாதில் நேற்று நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் ஷேன் வாட்சன் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பேட் செய்த ஐதராபாதின் கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் தொடங்கினர்.

டைமல் மில்ஸ் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ஓட்டங்கள் கணக்கைத் தொடங்கினார் வார்னர்,

அனிகெட் செளத்ரி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசிய கையோடு ஆட்டமிழந்தார். அவர் 8 பந்துகளில் 14 ஒட்டங்கள் எடுத்தார்.

பின்னர் களம் புகுந்த மோசஸ் ஹென்ரிக்ஸ் பவுண்டரியை விளாச, மறுமுனையில் ஷிகர் தவன் அதிரடியில் இறங்கினார். வாட்சன் வீசிய 6-ஆவது ஓவரில் தவன் 4 பவுண்டரிகளை விரட்ட, அந்த ஓவரில் மட்டும் 17 ஒட்டங்கள் கிடைத்தன.

மறுமுனையில் ஹென்ரிக்ஸும் அதிரடியில் இறங்க, 10 ஓவர்களில் 88 ஓட்டங்கள் சேர்த்தது ஐதராபாத்.

இதையடுத்து வந்த யுவராஜ் சிங், அனிகெட் செளத்ரி ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஒட்டங்கள் சேர்த்து 3-ஆவது விக்கெட்டாக வெளியேறினார்.

தீபக் ஹூடா என்ட்ரீ கொடுத்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 23 பந்துகளில் அரை சதமடித்தார். இது ஐபிஎல் போட்டியில் யுவராஜின் அதிவேக அரை சதமாகும்.

டைமல் மில்ஸ் வீசிய 19-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் பவுண்டரியையும், 3-ஆவது பந்தில் சிக்ஸரையும் விரட்டிய யுவராஜ் சிங், 4-ஆவது பந்தில் போல்டு ஆனார். அவர் 27 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 62 ஒட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து களம்புகுந்த வாட்சன், கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களை விளாச, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது ஐதராபாத்.

208 ஒட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெங்களூர் அணியில் மன்தீப் சிங், கிறிஸ் கெயில் முதல் விக்கெட்டுக்கு 52 ஒட்டங்கள் சேர்த்தது.

மன்தீப் சிங் 16 பந்துகளில் 24, கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த கேதார் ஜாதவ் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாக, அப்போதே பெங்களூரின் வெற்றி பறிபோனது.

இதன்பிறகு, டிராவிஸ் ஹெட் 30, ஷேன் வாட்சன் 22 ஒட்டங்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ஒட்டங்களில் வெளியேற, 19.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்குச் சுருண்டது பெங்களூர்.

ஐதராபாத் தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐதரபாத் அணியின் இந்த வெற்றிக்கு யுவாராஜின் அனல் பறக்கும் ஆட்டமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.