World Younger Boxing Three Indians in the Final

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் ஜோதி குலியா, சசி சோப்ரா, அன்குஷிதா போரோ ஆகிய மூவர் முன்னேறியுள்ளனர்.

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி குலியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தானின் ஜன்சயா அப்திராய்மோவாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

அடுத்ததாக இறுதிச்சுற்றில் ரஷியாவின் எடெனினா மோல்சனோவாவை எதிர்கொள்கிறார் ஜோதி குலியா.

அதேபோன்று, 57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் சசி சோப்ரா, மங்கோலியாவின் நமுன் மன்கோரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினார்.

இறுதிச்சுற்றில் வியத்நாமின் டோ ஹாங் நோக்கை எதிர்கொள்கிறார் சசி சோப்ரா.

இதேபோல, 64 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் அஸ்ஸாமைச் சேர்ந்த அன்குஷிதா போரோ, தாய்லாந்தின் தன்ச்நோக் சக்ஸ்ரீயை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இப்படி, உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியர் மூவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.