World Womens Younger Boxing Winning Five Golds
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா வீராங்கனைகள் தங்களது எடைப் பிரிவில் வென்று மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்றது.
இதில், 48 கிலோ எடைப் பிரிவில் நீது, 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா, 54 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி சௌதரி, 57 கிலோ எடைப் பிரிவில் சசி சோப்ரா மற்றும் 64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ ஆகிய வீராங்கனைகள் இறுதிச்சுற்றில் வெற்றிப் பெற்று தங்கம் வென்றனர்.
இந்தப் போட்டியில், +81 கிலோ எடைப் பிரிவில் நேஹா யாதவ் மற்றும் 81 கிலோ எடைப் பிரிவில் அனுபமா ஆகிய இரண்டு இந்தியர்கள் ஏற்கெனவே வெண்கலத்துடன் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதன்படி, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கஜகஸ்தானின் ஜஸிரா யுரக்பாயேவாவை எதிர்கொண்ட நீது 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ரஷியாவின் எகடெரினா மோல்சோனோவாவை 5-0 என ஜோதி குலியாவும், இங்கிலாந்தின் இவி ஜேன் ஸ்மித்தை 3-2 என சாக்ஷி சௌதரியும் வீழ்த்தினர்.
மற்றொரு ஆட்டத்தில் வியத்நாமின் நோக் டு ஹாங்கை 3-2 என்ற கணக்கில் சசி சோப்ராவும், ரஷியாவின் டைனிக் எகாடெரினாவை 4-1 என்ற கணக்கில் அங்குஷிதா போரோவும் வீழ்த்தினர்.
