world women criket...India win

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது. மிதாலி ராஜ், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 7வது அரைசதம் அடித்து, உலக சாதனை படைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரிட்டன் மற்றும் வேல்சில் 11 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள், லீக் முறையில் இப்போட்டியில் மோதுகின்றன.

நேற்று டெர்பையில் நடந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நைட் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு பூணம் ராத், ஸ்மிரிதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஒரு பக்கம் பூணம் ராத் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக ரன்கள் குவித்தார் மந்தனா.

.ஜென்னி கன் பந்தில் பவுண்டரி அடித்த மந்தனா, ஒருநாள் அரங்கில் 6வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடியில் அசத்தல் ரன் குவிப்பு காரணமாக இந்திய அணி 20.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.

முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த போது, 72 பந்துகளில் 90 ரன் எடுத்த மந்தனா அவுட்டானார். பின் வந்த கேப்டன் மிதாலி ராஜ், வேகமாக ரன்கள் சேர்த்தார்.

இதனிடையே மிதாலி ராஜ் ஒரு நாள் அரங்கில் 47வது அரைசதம் எட்டினார். தவிர, ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 7 அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். கடைசியில் இவர் 71 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.