உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரத்குமார் வெள்ளிப் பதக்கமும், வருண் பட்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் சரத்குமார் 1.84 மீ. உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதுதவிர அவர் தனது "பெர்சனல் பெஸ்டையும்' பதிவு செய்துள்ளார்.

அதே பிரிவில் இந்திய வீரர் வருண் பட்டி 1.77 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

இந்தப் பிரிவில் அமெரிக்காவின் சாம் கிரீவ் 1.86 மீ. உயரம் தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார்.

இந்தப் போட்டியில் இந்தியா இதுவரையில் ஒரு தங்கம், இரு வெள்ளி, இரு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 29-வது இடத்தில் உள்ளது என்பது கொசுறு தகவல்.