World hockey tournament India and the Netherlands collide today

உலக வலைகோல் பந்தாட்ட போட்டி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், நெதர்லாந்தும் இன்று மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக வலைகோல் பந்தாட்ட போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அனைத்திலும் வெற்றிக் கண்டதன் மூலம் காலிறுதியை உறுதி செய்துவிட்டது.

இந்திய அணி தனது முந்தைய ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

உலகின் 4-ஆம் நிலை அணியான நெதர்லாந்துடனான இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.

நெதர்லாந்து அணி தான் விளையாடிய முந்தைய இரு ஆட்டங்களில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தியுள்ளது.

இந்திய அணியின் முன் களத்தைப் பொறுத்தவரையில் ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், தல்விந்தர் சிங் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

மிட்பீல்டில் சர்தார் சிங், கேப்டன் மன்பிரீத் சிங் உள்ளிட்டோரும் பலம் சேர்க்கின்றனர்.

இந்திய அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் இல்லாத நிலையில், இளம் கோல் கீப்பர்களான விகாஸ் தாகியாவும், ஆகாஷ் சிக்டாவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் இந்தியா வெற்றிக் கண்டுள்ளது.

2014 சாம்பியன்ஸ் டிராபி, 2015-ல் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் பைனல் ஆகியவற்றில் இந்திய அணி, நெதர்லாந்தை வீழ்த்தியிருக்கிறது. எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் நெதர்லாந்து அணி, இந்தியாவை வீழ்த்தியுள்ளது என்பதும் கூடுதல் தகவல்.