World Hockey League Spain defeated Spain second victory
உலக ஹாக்கி லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ருசித்தது ஸ்பெயின்.
உலக ஹாக்கி லீக் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்றது. 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணி இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
முன்னதாக, அர்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்பெயின் தடுமாறியது. முதல் பாதியில் அர்ஜென்டீனா முதல் கோலைப் பதிவு செய்து முன்னிலை வகித்தது.
இதையடுத்து, சாதுரியமாக விளையாடிய ஸ்பெயின் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. எனினும், அந்த அணியால் கோலைப் பதிவு செய்ய இயலவில்லை. அதேநேரம், எதிரணியையும் கோல் அடிக்காமல் ஸ்பெயின் கவனமாக இருந்தது.
இருப்பினும், இரு அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கடைசி 10 நிமிட ஆட்டத்தில், ஸ்பெயின் 2 கோல்களைப் பதிவு செய்து வெற்றி வாகை சூடியது.
இரண்டு கோல்களை போட்டு வெற்றிப் பெற்ற ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் இது இரண்டாவது வெற்றியாக அமைந்தது.
