World Cup Archery Indian Mens team enter into finals
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி கால் பதித்துள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது,
இந்தப் போட்டியில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தனது அரையிறுதியில் 232 - 230 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
இந்திய அணி.இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் கொலம்பியாவை சந்திக்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி தங்களின் அரையிறுதியில் 152 - 158 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய ஜோடியிடம் தோல்வி கண்டதால் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் அமெரிக்காவுடன் மோதுகிறது.
