World Badminton Championship Srikanth advanced to next round



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ரஷியாவின் செர்ஜி சிரான்டுடன் மோதினார்.

இதில், 21-13, 21-12 என்ற நேர் செட்களில் செர்ஜி சிரான்டை தோற்கடித்தார் ஸ்ரீகாந்த்.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடிய ஸ்ரீகாந்த், 30 நிமிடங்களுக்குள்ளேயே ஆட்டத்தை முடித்து வைத்துவிட்டார்.

ஸ்ரீகாந்த், தனது 2-வது சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கோர்வீயுடன் மோதுகிறார்.