ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் உலக சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளார். 

ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் உலக சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளார். 

இன்று நடந்த முதல் தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தகுதி பெற்றார்.
24வயதான நீரஜ் சோப்ரா குரூப்-ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தார். இறுதிப்போட்டிக்கு மொத்தம் 12 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இதில் பதக்கம் வெல்வதற்குஅதிக வாய்ப்புள்ள வீரர்களில் நீரஜ் சோப்ரா முக்கியமானவராக இருக்கிறார். 

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 7.05மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. நடப்பு சாம்பியனும் கிரெனடாவின் ஆன்டர்ஸன் பீட்டர், மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் இருவரும் குரூப் பி பிரிவில் உள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 89.4 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தார்.ஆனால் இறுதிப்போட்டியில் 82.26 மீ்ட்டர் மட்டுமே நீரஜ் சோப்ராவால் எறிய முடிந்ததால் தோல்வி அடைந்தார். 

Scroll to load tweet…

உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பொறுத்தவரை 83மீட்டர் தொலைவுக்கு ஒரு வீரர் எறிந்தாலே ஆட்டோமேட்டிக் ரூட்டில் தேர்வாகிவிடுவார். இதில் நீரஜ் சோப்ரா 88 மீ்ட்டருக்கு அதிகமாக எறிந்துள்ளார். 
நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனை என்பது 89.94 மீட்டராகும். ஆனால், அதைவிடக் குறைவாக 88 மீட்டருக்கும் அதிகமாகத்தான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்துள்ளார். 

முதல் சுற்றில் செக் குடியரசு வீரர் ஜேக்கப் வாட்லிச் 85.23 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். 

Scroll to load tweet…

கடந்த மாதம் ஸ்டாக்ஹோம்மில் நடந்த கவுரவமிக்க டைமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தார். ஆனால், கிரெனடாவின் ஆன்டர்ஸன் பீட்டர் 90.31 மீட்டருக்கு எறிந்ததால் அவருக்கு தங்கப்பதக்கமும், நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளியும் கிடைத்தது.

இந்த உலக சாம்பியன்ஷிப்பிலும் ஆன்டர்ஸன் பீட்டர் போட்டியிடுகிறார். நிச்சயம் நீரஜ் சோப்ராவுக்கு ஆன்டர்ஸன் பெரிய சவாலாக இருப்பார்.