Won in the first round Ready for the next round

ஸ்விஸ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, சுபங்கார் தேய் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் ஸ்விஸ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் பிரணாய் 21-15, 21-18 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டேவிட் பெங்கை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் ஸ்காட்லாந்தின் கெரன் மெரில்லீஸை சந்திக்கிறார் பிரணாய்.

சமீர் வர்மா 2-10, 21-16 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் ஜெர்கிளே கிராவ்ஸை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் ஜப்பானின் கன்டா சுனேயமாவை எதிர்கொள்கிறார் சமீர் வர்மா.

சுபங்கார் தேய் 17-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ரோவர்ஸை தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்ததாக ஸ்லோவேகியாவின் இஸ்டோக் உட்ரோஸாவுடன் மோதுகிறார் சுபங்கார் தேய்.