தேசிய சீனியர் வாலிபால் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய இரயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்று அபார வெற்றிப் பெற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இறுதிச்சுற்றில் இந்திய இரயில்வே அணி 25-21, 21-25, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் கேரள அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
மகளிர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 25-15,
25-17, 25-9 என்ற நேர் செட்களில் ஆந்திர அணியைத் தோற்கடித்தது.
ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில் கேரள அணி கடும் போராட்டத்துக்குப் பிறகு
25-17, 20-25, 26-24, 25-27, 15-9 என்ற செட் கணக்கில் இந்திய இரயில்வே அணியைத் தோற்கடித்தது.
ஆடவர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 20-25, 25-20, 34-32, 25-21 என்ற செட் கணக்கில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.
