Womens Cricket England and Australia today crash in the final match
முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் இன்று மோதுகின்றன.
முத்தரப்பு மகளிர் டி20 தொடர் கடந்த 22-ஆம் தேதி முதல் டி20 ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. அதில், ஆஸ்திரேலிய மகளிர் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர்.
இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை மட்டுமே தழுவியது. அதனால், இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஆறாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மட்டும் இந்தியா முதல் வெற்றியை பெற்றது. ஆனால், அது ஆறுதல் வெற்றியாகவே இருந்தது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று வெற்றிகளையும், இங்கிலாந்து மகளிர் அணி இரண்டு வெற்றிகளுடனும் களத்தில் உள்ளன.
தொடரைக் கைப்பற்றப்போகும் அணி எது? என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
