Women World Cup is india defeat New Zealand and enter into semifinals
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை இன்று சந்திக்கிறது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி டெர்பியில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி போட்டியைவிட்டு வெளியேறும் என்பதால் இரு அணிகளுக்கும் இது இறுதி ஆட்டமாகும்.
புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி எட்டு புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், நியூஸிலாந்து 7 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 4-ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஸ்மிருதி மந்தனா, பூனம் ரெளத், கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மான்பிரீத் கெளர், தீப்தி சர்மா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே கூட்டணியை நம்பியுள்ளது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர்களான தீப்தி சர்மா, இக்தா பிஸ்த், ஹர்மான் பிரித் கெளர், பூனம் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினாலும் நியூசிலாந்தை வீழ்த்தும் அளவிற்கு பந்துவீச வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட நியூஸிலாந்து அணி, கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்டுள்ளது நியூஸிலாந்து.
