women cricket team...bcci announces 50 lacks per women
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை…மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு, தலா 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் அசத்திவரும் இந்திய மகளிர் அணிக்கு, தலா 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அணியில் உள்ள ஊழியர்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
