மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய வெற்றிப் பெற்றது.

மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில்,  இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.

இதில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது. 

இந்த நிலையில், ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்ரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

எளிதான வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 11.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 97 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கு நடுவே இந்தியா - இங்கிலாந்து மோதும் மற்றொரு லீக் போட்டி மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. 

இந்திய அணி ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்துடன் ஒரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டது. இதனால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது சூழ்நிலையில் இந்தியா உள்ளது.