within two months i can develop my performance

எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஸ்ரீகாந்த தெரிவித்தார்.

ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி ஜெர்மனியின் முல்ஹெய்ம் அன் டெர் ரூர் நகரில் நாளை தொடங்குகிறது.

முழங்கால் காயத்திலிருந்து மீண்டுள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தப் போட்டியில் பட்டம் வென்று ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறார்.

அவர் தனது முதல் சுற்றில் ஸ்லோவேகியாவின் ஆலென் ரோஜை சந்திக்கிறார்.

இது குறித்து போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் கூறியதாவது:

“நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அதேநேரத்தில் எல்லா போட்டிகளிலும் அவசரமாக பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தரவரிசையைப் பற்றி கவலைப்படுவது இல்லை. நல்ல உடற்தகுதியை எட்டிவிட்டால் எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில் இரண்டே மாதங்களில் தரவரிசையில் முன்னேற்றம் காண முடியும்' என்றார்.