Winston Salem Roberto Bautista and Kyle Edmund progress for the semi-finals
வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் மற்றும் பிரிட்டனின் கைல் எட்மான்ட் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் வின்ஸ்டன் சலேம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
இதில், 6-2, 7-6 (3) என்ற நேர் செட்களில் டெய்லர் ஃபிரிட்ஸை தோற்கடித்தார் பௌதிஸ்டா.
பெளதிஸ்டா தனது அரையிறுதியில் ஜெர்மனியின் ஜன் லென்னார்டு ஸ்டிரஃப்பை சந்திக்கிறார்.
மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் கைல் எட்மான்ட், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சனுடன் மோதினார்.
இதில், 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்டீவன் ஜான்சனை வீழ்த்தினார் எட்மான்ட்.
எட்மன்ட் தனது அரையிறுதியில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் டேமிர் தும்ஹுர்ரை சந்திக்கிறார்.
