Wimbledon tennis 49th position player defeat the world third player

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை, உலகின் 49-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மேத்வதேவ் தோற்கடித்தார். அதுவும் முதல் சுற்றிலேயே.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் நேற்றுத் தொடங்கியது.

இதில் முதல் நாளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் மூன்று முறை சாம்பியனான வாவ்ரிங்கா மற்றும் மெத்வதேவ் மோதினர்.

இந்த ஆட்டத்தின்போது வாவ்ரிங்கா முழங்கால் வழியால் அவதிப்பட்டதால் தடுமாற்றத்துடன் ஆடிய அவரை 6-4, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் மெத்வதேவ்.

இந்த வெற்றியின்மூலம் முதல் முறையாக பிரதான சுற்றுக்கு முன்னேறினர் ரஷியாவின் டேனில் மேத்வதேவ்.

வெற்றிப் பெற்ற மெத்வதேவ் கூறியது:

'இந்த ஆட்டத்தில் நான் எவரை வீழ்த்தியிருந்தாலும் இது எனது வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாகும். இந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது எனக்கொரு நீங்கா நினைவாக இருக்கும்” என்றார்.

தோல்வி பெற்ற வாவ்ரிங்கா கூறியது:

'புல் தரை ஆட்டமானது, எனது முழங்காலுக்கு உகந்ததாக இல்லை. என்ன பிரச்சனை என்பதை நான் முதலில் கண்டறிய வேண்டியுள்ளது. அப்போது தான் தொடர்ந்து வலியின்றி என்னால் விளையாட இயலும்.

ஆஸ்திரேலிய ஓபன் முதலே இதனால் தடுமாறி வருகிறேன். இருப்பினும் சமீபத்திய பயிற்சிகளின்போது பிரச்சனை இல்லாததாலேயே விம்பிள்டனில் களம் கண்டேன்' என்றார்.

இந்த தோல்வி விம்பிள்டன் முதல் சுற்றில் வாவ்ரிங்கா அடைந்துள்ள 6-ஆவது தோல்வியாகும்.