விம்பிள்டன் 2025 பைனலில் அல்காரஸ் சின்னர் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Wimbledon 2025 Final Alcaraz vs Sinner: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் விளையாடி வருகின்றனர்.
முதல் செட்டை கைப்பற்றிய கார்லஸ் அல்காரஸ்
உலகத்தரம் வாய்ந்த இந்த இரண்டு வீரர்களின் ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்தது. தொடக்கத்தில் ஜானிக் சின்னர் ஒரு புள்ளியைப் பெற்று, அல்காரஸை பிரேக் செய்து 2-4 என முன்னிலை பெற்றார். ஆனால் நடப்பு சாம்பியனான அல்காரஸ் தன்னுடைய அசாத்தியமான ஷாட்கள் மூலம் மீண்டும் ஆட்டத்திற்குத் திரும்பினார். அதாவது அடுத்த நான்கு கேம்களையும் தொடர்ச்சியாக வென்று, முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார்.
விறுவிறுப்பாக சென்ற ஆட்டம்
பின்பு இரண்டாவது செட்டில் சின்னர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி முன்னிலைக்கு வந்தார். இரண்டாவது செட்டில் சின்னர் 5-4 என முன்னிலையில் இருந்த நிலையில், அல்காரஸ் ஏஸ் அடித்து புள்ளியைக் கைப்பற்றினார். ஆனாலும் சின்னர் சிறப்பாக விளையாடி இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் ஆட்டம் 1-1 என்ற செட் கணக்கில் சமநிலையில் சென்றதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது.
மூன்றாவது செட்
இதனைத் தொடர்ந்து மூன்றாவது செட் விறுவிறுப்பாக தொடங்கியது. இருவரும் தங்கள் சர்வீஸைத் தக்கவைக்க கடுமையாகப் போராடினார்கள். அல்காரஸ் தனது சர்வீஸைத் தக்கவைத்து, 2-1 என முன்னிலைக்கு வந்தார். சின்னர் இதற்கு பதிலளித்து தனது சர்வீஸை தக்கவைத்து, 1-1 என சமன் செய்தார். ஆனாலும் அல்காரஸ் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.


