இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என இழந்த நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, 19.2 ஓவரில் வெறும் 139 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி இதுதான். 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. ஒருநாள் தொடரில் வாங்கிய மரண அடிக்கு இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதலாக அமையும்.

போட்டிக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினோம். ஒரு அணியாக அனைத்து வகையிலும் சிறப்பான, இப்படியொரு ஆட்டத்தைத்தான் எதிர்பார்த்தோம். பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடினர். நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினோம். பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டோம். ஒரு முழுமையான ஆட்டமாக அமைந்தது. இதேபோன்றே எல்லா நாளும் ஆடிவிட முடியாது. எனினும் இந்த ஆட்டத்தை தொடர் முழுவதும் தொடர முனைவோம் என வில்லியம்சன் தெரிவித்தார்.