இந்திய கிரிக்கெட் அணியின் புது மேலாளர் யார்? என்பதை பிசிசிஐ இன்று தேர்வு செய்யும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணிக்கான மேலாளர் பணியிடம் காலியாக இருக்கிறது என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 21-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அப்பதவிக்காக 35 பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்து சுமார் 13 பேர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த நேர்காணல் பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா தலைமையில் அந்த 13 பேருக்கும் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இதிலிருந்து ஐந்து பேரை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

இந்த 5 பேரின் விவரங்களும் பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சௌத்ரி மற்றும் பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கும் அனுப்பப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் புது மேலாளர் யார் என்பதை இன்று தேர்வு பிசிசிஐ தேற்வு செய்யும்.