Who is the Best French Football Player of the Year Award?
சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு பிரபல பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகவும் அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரரான நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தற்போது குணமடைந்து வருகிறார். அதன்படி வரும் ஜூன் மாதம் ரஷியாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வருகிறார். எனினும், கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக 20 லீக் ஆட்டங்களில் நெய்மர் 19 கோல்களை அடித்தார்.
பாரிஸில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது நெய்மருக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக நெய்மர், "காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை உலகக் கோப்பையில் வழங்க ஆர்வமாக உள்ளேன். பிஎஸ்ஜி அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவுமில்லை. அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.
