who is going to retain play off chance

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் ஆடிவருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் லீவைஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 87 ரன்கள் சேர்த்தனர். 38 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே ரோஹித்தும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 60 ரன்கள் எடுத்து லீவைஸும் 12 ரன்களில் இஷான் கிஷானும் அவுட்டாகினர்.

அதன்பிறகு பாண்டியா சகோதரர்கள் ஜோடி சேர்ந்து ஆடினர். குருணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஹர்திக்குடன் பென் கட்டிங் ஜோடி சேர்ந்தார். 18 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 136 ரன்கள் எடுத்திருந்தது.

உனாத்கத் வீசிய 19வது ஓவரை ஹர்திக் பாண்டியா வெளுத்து வாங்கினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் சிக்ஸர் விளாசினார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் இரண்டு சிங்கிள்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 

கடைசி ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸர் அடித்துவிட்டு இரண்டாவது பந்தில் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த ஹர்திக் பாண்டியா, நான்காவது பந்தில் ரன் எடுக்காமல் ஐந்தாவது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் கட்டிங். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 168 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பாண்டியா, 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

169 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.