Asianet News TamilAsianet News Tamil

கோலி அண்ணா நீங்க மட்டும்தான் அடிப்பீங்களா..? நாங்கலாம் அடிக்க மாட்டோமா..? தெறிக்கவிடும் ஹெட்மயர்

322 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மயர் அபாரமாக ஆடிவருகிறார். முதல் போட்டியில் சதமடித்த ஹெட்மயர், இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.
 

west indies young player hetmyer brutally attacking indian bowling
Author
Vizag, First Published Oct 24, 2018, 8:00 PM IST

322 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மயர் அபாரமாக ஆடிவருகிறார். முதல் போட்டியில் சதமடித்த ஹெட்மயர், இந்த போட்டியிலும் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கோலி மற்றும் ராயுடுவின் சிறப்பான ஆட்டத்தால் 322 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் 4 ரன்களிலும் தவான் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 40 ரன்களுக்கே முதலிரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், கோலி-ராயுடு ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 139 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ராயுடு 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து தோனி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஒருபுறம் மளமளவென விக்கெட்டுகளை இழந்தாலும் கோலி மட்டும் நிலைத்து நின்றார். சிறப்பாக ஆடி சதமடித்த கோலி, சதம் கடந்த பிறகு கடைசி மூன்று ஓவர்களில் சிக்ஸர்களாக விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி நேரத்தில் கோலியின் அதிரடியால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 321 ரன்களை குவித்தது. கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 157 ரன்களை குவித்தார்.

west indies young player hetmyer brutally attacking indian bowling

இதையடுத்து 322 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கியது. எனினும் பவல் 18 ரன்களிலும் ஹேம்ராஜ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் 13 ரன்களில் குல்தீப்பின் பந்தில் கிளீன் போல்டானார்.

இதையடுத்து அந்த அணியின் இளம் வீரர் ஹெட்மயர், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து சதம் விளாசிய ஹெட்மயர், இந்த போட்டியிலும் களமிறங்கியது முதலே அதிரடியாக ஆட தொடங்கினார். ஜடேஜா, சாஹல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசிவருகிறார். அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த ஹெட்மயர், 7 சிக்ஸர்களை விளாசி ஆடிவருகிறார். 70 ரன்களை கடந்து ஹெட்மயர் ஆடிவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. 

west indies young player hetmyer brutally attacking indian bowling

ஹெட்மயரை அவுட்டாக்காவிட்டால் படுதோல்வியை இந்திய அணிக்கு பரிசளித்துவிடுவார் என்பது உறுதி.

Follow Us:
Download App:
  • android
  • ios