We will definitely qualify for the playoffs - Chris Wokes with confidence
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு நாங்கள் நிச்சயம் தகுதி பெறுவோம் எங்கள் அணிக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது என கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்து ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் வென்றது.
கொல்கத்தா அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் தோற்றுள்ளது.
இந்த நிலையில், அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் கூறியது:
“எங்கள் அணியினர் இப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அடுத்ததாக சில முக்கிய ஆட்டங்களில் விளையாடவுள்ளோம். அதில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். இப்போதும் முதல் இரு இடங்களில் ஒன்றை பிடிக்க முடியும் என நாங்கள் திடமாக நம்புகிறோம்.
புணேவுக்கு எதிரான ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. அதன்பிறகும் வலுவான ஸ்கோரை குவிக்க முயன்றோம். ஆனால் முடியவில்லை.
டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு வலுவான ஸ்கோரை குவிப்பது கடினம். நாங்கள் 15 முதல் 20 ஓட்டங்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம்” என்று கூறினார்.
