We need other teams to play in our own soil - Pakistan Captain

சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றியின் மூலம் இனியாவது மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என உருக்கமுடன் கேட்டுக் கொண்டார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று நடைப்பெற்றது.

இதில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது அபாரமான ஆட்டத்தால் தோற்கடித்து வாகைச் சூடியது பாகிஸ்தான்.

இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் விடிய விடிய கொண்டாடினர். இதுவரைப் பெற்ற தோல்விகளுக்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுங்கள் என்ற இம்ரான்கானின் சவாலை ஏற்று அதை நடத்தியும் காட்டிவிட்டனர் பாகிஸ்தான் அணியினர்

பாகிஸ்தான் பத்து வருடங்கள் கழித்து இந்த வெற்றியை பெற்றுள்ளது அதுவும் இந்தியாவை வீழ்த்தி.

நேற்றைய வெற்றியில் முக்கிய பங்கு கேப்டன் சர்பராஸ்ஸுக்கு உண்டு.

வெற்றிப் பெற்றவுடன் கேப்டன் சர்பராஸ் கூறியது:

“இந்த வெற்றி இன்று மற்றும் நாளை நினைவுகூரத்தக்கது அல்ல. பல வருடங்கள் கொண்டாடத்தக்கது. பாகிஸ்தானில் கிரிக்கெட் இருக்கும் வரை இந்தச் சாதனை இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.

நீண்ட நாள்களாக நாங்கள் துபாயைதான் ஹோம் கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். மற்ற அணிகளை போல் சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றி மூலம் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என இனியாவது முடிவு எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.