சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை வீரர் ஷேன் வாட்சன் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த வர்ணணையாளர் ஒருவரின் லேப்டாப்பை பதம் பார்த்தது.

கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்திர ஜடேஜா 2 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஷேன் வாட்சன், ராயுடு, பிராவோ, சாம் பில்லிங்ஸ் மிகவும் அதிரடியாக ஆடினார்கள்.

நேற்றைய போட்டியில் சென்னையின் அணியின் ஓப்பனிங் வீரர் ஷான் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். இவரது அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி தொடக்கத்திலேயே நல்ல ஸ்கோர் எடுத்தது. 202 ரன்கள் என்று இலக்கை நோக்கி விளையாடியதால் பொறுப்பை உணர்ந்து ஷேன் வாட்சன் மிகவும் அதிரடியாக ஆடினார்.

நேற்றைய போட்டியில் வாட்சன் மொத்தம் 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். அதே போல் இன்னொரு ஓப்பனர் அம்பதி ராயுடு 39 ரன்கள் எடுத்தார். இவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்தார். இதனால் சென்னை அணி 5 ஓவர்களிலேயே 80 ரன்கள் எடுத்தது.

வாட்சன் அடித்த மூன்று சிக்ஸ்களில் ஒரு சிக்ஸ் வர்ணனையாளர்கள் பக்கம் சென்று விழுந்தது. அதில் உள்ளே தொழில்நுட்பப் குழுவில் வேலை பார்த்த நபர் ஒருவரின் லேப்டாப்பில் பந்து வேகமாக விழுந்துள்ளது. இதனால் அந்த லேப்டாப் உடைந்தது. அந்த அளவுக்கு வலுவான ஒரு சிக்ஸரை அடித்து வாட்சன் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்..