Washington choice of the Indian team in Sri Lanka against Sri Lanka
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார் வாஷிங்டன். அவர், கிரிக்கெட்டில் இந்த நிலைக்கு வருவதற்கு தனது தந்தைக்கும், பயிற்சியாளருக்குமே முக்கியப் பங்குண்டு என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் (18) தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார் .
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், 10-வது ஐபிஎல் சீசனில், புனே அணிக்காக வாஷிங்டன் சுந்தர் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டார்.
ரஞ்சி கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு நன்றாக ஆடி வருகிறார். ஆல் ரௌண்டரான வாஷிங்டன் சுந்தர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறியது: "இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது கனவு. நான் கிரிக்கெட் வீரராக உருவெடுத்ததில், எனது தந்தைக்கும் (சுந்தர்), எனது பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன் உள்பட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முக்கியப் பங்குண்டு.
இந்திய அணியில் இடம்பெறுவதற்கான தகுதித் தேர்வில் முன்பு தோல்வி அடைந்ததை அடுத்து, தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்" என்று அவர் கூறினார்.
இவரது தந்தை சுந்தர், 'இந்திய அணியில் வாஷிங்டன் இடம்பெற்றது ஒரு தந்தையாகவும், பயிற்சியாளராகவும் எனக்கு மகிழ்ச்சி' என்று தெரிவித்தார்.
