ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நாளுக்கு நாள் மேம்பட்டுவருவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு அளிக்கப்பட்ட ஓய்வால், கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா, தனது கேப்டன்சி திறமையை நிரூபித்தார். அணியை சிறப்பாக வழிநடத்தி 6 அணிகள் கலந்துகொண்டு ஆடிய ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். 

ரோஹித் சர்மா களத்தில் சில நேரங்களில் சாதுர்யமாக நடந்துகொள்வது, பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம், வீரர்களை கையாள்வது என அனைத்திலுமே கோலியை விட சிறப்பாகவே செயல்படுகிறார். இக்கட்டான நேரங்களில் ரோஹித் சர்மா டென்ஷனாகாமல் சூழலை நிதானமாக கையாண்டு, வீரர்களை முறையாக வழிநடத்தி, கைமீறி போகும் போட்டிகளில் மீண்டும் போட்டிக்குள் அணியை கொண்டுவந்து விடுகிறார் ரோஹித். 

பவுலர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களை கையாளும் திறன், கள வியூகம், நிதானம் என அனைத்திலுமே கோலியை விட மேம்பட்ட கேப்டன் தான் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்துள்ளார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கவாஸ்கர், வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கோலிக்கு மிகவும் நெருக்கமான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். 

ஏற்கனவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ள ரோஹித், இந்திய அணியை வழிநடத்த சரியான கேப்டன் ரோஹித்தா? கோலியா? என்ற விவாதத்தை தொடங்கிவைத்துள்ளார். 

இந்திய அணியின் நிரந்தர கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால், கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்த தயார் என வெளிப்படையாக அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸும் புகழ்ந்துள்ளார். ரோஹித்தின் கேப்டன்சி குறித்து பேசிய வக்கார் யூனிஸ், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. ஐபிஎல்லில் அவர் கேப்டனாக செயல்பட தொடங்கியது முதல் அவரை பார்த்துவருகிறேன். அவரது கேப்டன்சி தினம் தினம் மேம்படுகிறது. வீரர்களை முடிவெடுக்க ரோஹித் சர்மா அனுமதிக்கிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன் என வக்கார் யூனிஸ் புகழ்ந்து பேசியுள்ளார். 

ஏற்கனவே ரோஹித்தின் கேப்டன்சியை பல ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளிய நிலையில் வக்கார் யூனிஸும் ரோஹித்தின் கேப்டன்சியை புகழ்ந்து, கோலியின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியுள்ளார்.