vvs laxman advice to ms dhoni
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி விலக வேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். எனினும் கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இக்கட்டான நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய தருணத்தில் தோனி நிதானமாக ஆடியதே தோல்விக்குக் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக 20 ஓவர் போட்டிகளில் இருந்தாவது விலக தோனி முன்வர வேண்டும் எனவும் அப்போதுதான் இளம் வீரர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதேநேரத்தில் ஒருநாள் போட்டிகளில் தோனியின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது எனவும் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.
