Viswanathan Anand is sixth in chess competition in Norway

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மூன்று புள்லிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நார்வே செஸ் போட்டி நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

இந்தத் தோல்வி, கார்ல்சனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தத் தோல்வியால் அவர் தரவரிசையில் முதலிடத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர் 2011 ஜூலையில் இருந்தே தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் 7-ஆவது சுற்றில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன் 5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா 4.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், அமெரிக்காவின் வெஸ்லே சோ 3 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.

விஸ்நாதன் ஆனந்த், அமெரிக்காவின் ஃபாபியானோ கருணா, ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.