சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தமிழகத்தை சேர்ந்தவரும் 5 முறை செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக மீண்டும் அர்காடி வோர்கோவிச் மீண்டும் தேர்வாகியுள்ளார். 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் நடக்க முக்கிய காரணமாக இருந்தது விஸ்வநாதன் ஆனந்த். 5 முறை செஸ் சாம்பியனும் தமிழகத்தை சேர்ந்தவரும் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த் தான் செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடக்க முக்கிய காரணம்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடந்துவரும் நிலையில், சென்னையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர், துணை தலைவர் தேர்வு நடந்தது 

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக மீண்டும் அர்காடி வோர்கோவிச் மீண்டும் தேர்வாகியுள்ளார்.