virat kohli century

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேதர் ஜாதவும் 12 ரன்களில் வெளியேறினார்.

மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கேப்டன் விராட் கோலியும் தினேஷ் கார்த்திக்கும் சற்று பொறுமையாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 37 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தோனியும் சோபிக்க தவறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கோலி, ஒருநாள் போட்டியில் தனது 31-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து கோலி விளையாடி வருகிறார்.

இந்திய அணியை தனது சதத்தின் மூலம் சரிவில் இருந்து மீட்ட கேப்டன் கோலி, உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.